Tuesday, February 14, 2012

'மெரினா' நாயகனுக்கு தென்றல் வீச ஆரம்பிச்சிடுச்சு.....









விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தனது நகைச்சுவையான தொகுப்பால் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மெரினா' படத்தில் நாயகனாக அறிமுகமானார். தன் இயல்பான நடிப்பு
மற்றும் வசன உச்சரிப்பின் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகராக வரவேற்பைப் பெற்றிருக்கிறார். 'மெரினா' படத்தில் மட்டுமல்லாது, தனுஷ் நடித்து இருக்கும் '3' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். எழில் இயக்கும் 'மனம்கொத்திப் பறவை' படத்தின் நாயகனாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' மற்றம் 'நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லீ இயக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகனாக 'மெரினா'வுக்கு முன்னரே ஒப்பந்தமாகிவிட்டாராம் சிவகார்த்திகேயன். அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'முகப்புத்தகம்' என்ற குறும்படம் யூடிபில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தென்றல் வீச ஆரம்பிச்சிடுச்சு.....

No comments:

Post a Comment