தனது படங்கள் வெற்றி பெற்றால் ஏதாவது கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது தனுஷின் வழக்கம். அப்படித்தான்
'கொலவெறி' பாடலின் வெறித்தனமான வெற்றியை முன்பு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று கொண்டாடி வந்தார். அதேபோல் இப்போது திருப்பதி ஏழுமலையான் சன்னதிக்கு மனைவி ஐஸ்வர்யா மற்றும் 'கொலவெறி' இசையமைப்பாளர் அனிருத்துடன் சென்று முடி காணிக்கை செலுத்தி விட்டு திரும்பியிருக்கிறார். அடுத்து '3' படம் திரைக்கு வந்ததும் இந்தி படத்தில் நடிக்க செல்கிறார். அதன்பிறகு இன்னும் 6 மாதத்துக்குப் பிறகுதான் சென்னை திரும்புவாராம். அதைத்தொடர்ந்து புதுப்படங்களுக்கு கதை கேட்டுவிட்டு நடிக்கத் தொடங்குவாராம் தனுஷ்.
No comments:
Post a Comment