ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படம் துப்பாக்கி. இதன்படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. ஆனால் பெப்சி தொழிலாளர்கள்- தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் சம்பளப்பிரச்சினை சம்பந்தமான மோதலில் இதன் படப்பிடிப்பை காலவரையரையின்றி நிறுத்தி விட்டார் முருகதாஸ்.
இதனால் விஜய் வட்டாரம் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம் தயாரிப்பாளர் சங்கத்தலைவரான விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்தான், பெப்சியின் ஒத்துழைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று முருகதாஸ் பெப்சிக்கு ஆதரவான சில இயக்குனர்களின் வார்த்தைக்கு கட்டுப்பாட்டு படப்பிடிப்பை நிறுத்தி விட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தலைவரின் மகன் நடிக்கும் படமே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே என்று சிலர் கேலி பேசத் தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment