Monday, February 06, 2012

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.08 கோடி அபராதம்

பாரீஸ்: வரைபட வெளியீட்டில் மோசடி செய்ததாக கூறி, கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.08 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இணையதள தேடுதல் சேவையில் முன்னணி
வகிக்கிறது கூகுள். இந்நிறுவனம் ஆன்லைன் வரைபட சேவையை இலவசமாக அளிப்பதாக அறிவித்தது. இதன் மூலம், ஆன்லைன் வரைபட சந்தையை கூகுள் முழுமையாக கைப்பற்றியது. 

ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரைபட சேவையை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு மட்டுமே இலவச சேவை அளிக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து, இலவசம் என்ற பெயரில் அதிக வாடிக்கையாளரை கவர்ந்து, சந்தையை கைப்பற்ற மோசடியில் ஈடுபட்டதாக கூகுள் மீது பிரான்சின் பாட்டின் கார்டோகிராப்ஸ் வரைபட நிறுவனம் வழக்கு தொடர்ந்து. இதை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.08 கோடி அபராதம் விதித்தது.

No comments:

Post a Comment