Monday, January 02, 2012

இளமையான காதல் கதை 'இஷ்டம்''.

  
உத்தமபுத்திரன், ஒஸ்தி படங்களைத் தயாரித்த பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் 'இஷ்டம்''. இதில் விமல் நாயகனாகவும், நிஷா அகர்வால் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இன்னொரு ஜோடியாக பார்வதி நிர்பான், அனுப் நடிக்கின்றனர்.
மற்றும் சந்தானம், சார்லி, பிரகதி, யுவராணி, நமோ நாராய ணன், சுவாமிநாதன், உமா பத்மநாபன், செம்புலி ஜெகன், கராத்தே ராஜா, டி.வி.ராவ், ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு: சேகர் வி.ஜோசப், இசை: தமன், எடிட்டிங்: சாய் சுரேஷ், நடனம்: ஸ்ரீதர்-கிரிஷ், பாடல்கள்: நா.முத்துக்குமார், விவேகா, தயாரிப்பு மேற்பார்வை: சுவாமிநாதன், தயாரிப்பு: ரமேஷ்தாண்ட்ரா, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பிரேம் நிஸார்.  இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமானது.
நானின்றி நானா இல்லை ஏனென்று கேட்கிறேன் என்ற பாடல் காட்சியில் விமல், நிஷா அகர்வால், நடித்தனர்.  உலகப்புகழ் பெற்ற நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த ஊரில் படப்பிடிப்பு நடைபெற்றது. அவரை கவுரவப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்த சிலையைப் பார்த்து மெய் மறந்து போனோம் என்றார் இயக்குனர். வித்தியாசமான இளமையான காதல் கதையாக உருவாகி வருகிறது.

1 comment: