Monday, January 02, 2012

வடிவேலு ரீஎன்ட்ரி








நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலோடு, காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் நடிகர் வடிவேலுவும்
ஒருவர். ஆனால் வாய் ஜம்பம் மட்டும் இன்னும் குறையாமல், படங்களில் நடிப்பதை நான் தான் தவிர்த்து வருகிறேன் என தொடர்ந்து கூறி வருகிறார்.


இந்நிலையில், இயக்குனர் சிம்புத்தேவன் தனுஷை வைத்து அவர் எடுக்க இருக்கும் அடுத்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் வடிவேலு கால்ஷீட் பிரச்னையால் மாற்றப்பட்டார். இதனால் தனுஷ், தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்வாரா என தயக்கத்தில் இருந்தாராம் சிம்புத்தேவன். ஆனால் நடிகர் தனுஷ் பெருந்தன்மையாக, ஏற்கனவே வடிவேலு நிறைய பட்டுவிட்டார் அதனால் இனிமேல் அவர் சரியாக இருப்பார் என்று பரிவோடு சொல்லி பச்சைக் கொடி காட்டியிருக்கிறாம். இதனால் வடிவேலு ரீஎன்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது!

No comments:

Post a Comment