Tuesday, January 10, 2012

ரஜினிக்கு ஜோடியாகிறார் கேத்ரினா


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கோச்சடையான்  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கேத்ரினா கைப் நடிக்க உள்ளார் என்றார் சவுந்தர்யா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘ராணா படத்தில் ரஜினி நடிக்க இருந்தார். இதற்கிடையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்படம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தனது 2வது மகள் சவுந்தர்யா இயக்கும் ‘கோச்சடையான்  படத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. இப படத்துக்கான ஆரம்ப கட்ட வேலைகள் முடிந்துவிட்டன. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் வேறு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார். மேலும் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினாவிடமும் பேசப்பட்டது. அவர் ஹீரோயினாக நடிக்க சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.

இது பற்றி சவுந்தர்யா கூறும்போது,  கேத்ரினா கைப்புடன் பேசி வருவது உண்மைதான். அதுபற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றார். பாலிவுட்டில் கேத்ரினா பிஸியாக நடித்து வருகிறார். யஷ் சோப்ரா  தயாரிக்கும் ‘ஏக் தா டைகர்  படத்தில் சல்மான் கானுடனும், பெயரிடப்படாத ஷாருக்கான் படம் ஒன்றிலும் அவர் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி தந்திருக்கிறார். இந்நிலையில் இன்னும் சில மாதத்தில் தனது கால்ஷீட் பற்றி உறுதி செய்வதாக சவுந்தர்யாவிடம் கேத்ரினா தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் ஒரு பேட்டியில், ‘அடுத்த மாதம் கோச்சடையான் ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன்  என அறிவித்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment