Monday, January 02, 2012

வெளி நாட்டு முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் நேரடி முதலீடு செய்ய இந்தியா அனுமதி



புதுடில்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கும் , இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம்
 தகுதியுடைய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குசந்தையில் நேடியாக முதலீடு செய்ய முடியும். பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை கவர , இந்திய மூலதன சந்தை அனுமதியளித்து. இதன்படி தகுதிபெற்ற வெளிநாட்டு வாழ் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மையத்தின் (க்யூ. எப்.ஐ ) வாயிலாக தகுதி பெற்ற முதலீட்டாளர்கள், என்.ஆர்.ஐ.க்கள் ஆகியோர் இனி இந்திய பங்குச்சந்தையான செபியில் நேரடியாக முதலீடு செய்யலாம். இதற்கான முறையான அறிவிப்பினை ஜனவரி 15-ம் தேதியன்று நிதித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ,இந்திய பங்குசந்தையான (‌செபி) வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தபுத்தாண்டில் (2012) செபியில் மேற்கொள்ளப்பட்ட முதல் சீர்திருத்தத்தின் மூலம் , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்திய நிறுவனங்களில் பங்குகளை இனி வெளிநாட்டவர் வாங்கலாம் எனவும், இந்திய நிறுவனங்களில் இனி வெளிநாட்டினர் நேரடியாக முதலீடு செய்ய முடியும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment