Monday, January 23, 2012

கூரியர் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்

 கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஞ்ஞானி வெங்கடராவ். இவரின் மகன் நரம்பு சம்பந்தமான நோயால் 2000ம் ஆண்டில் இறந்தார். இதையடுத்து, ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் அவரின் மூளை மற்றும் நுரையீரலை அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்தார். இந்த பார்சலை அனுப்ப முதலில் சம்மதித்த
 பெடக்ஸ் கூரியர் நிறுவனம், பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்தது. விரக்தியடைந்த ராவ், கேரள மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை ஆணையம் தள்ளுபடி செய்தது. தேசிய நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். உடல் பாகங்களை அனுப்ப மறுப்பு தெரிவித்த கூரியர் நிறுவனம், ராவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment