Wednesday, January 11, 2012

தங்கத்தை இறக்குமதி செய்ய 4 வங்கிகளுக்கு ரிசர்வு வங்கி அனுமதி










புதுடெல்லி: தங்கத்தை இறக்குமதி செய்ய சிட்டி யூனியன் வங்கி உட்பட மேலும் 4 வங்கிகளுக்கு ரிசர்வு வங்கி அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் தங்கத்தை பயன்படுத்துவதிலும் இறக்குமதி செய்வதிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.


இதை கருத்தில் கொண்டு மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு சிட்டி யூனியன் வங்கி, யெஸ் பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஐஎன்ஜி வைசியா வங்கி ஆகியவற்றிற்கு ரிசர்வு வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் தங்கம் இறக்குமதிக்கு உரிமம் பெற்ற வங்கிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment