Wednesday, January 11, 2012

செல்போன் கம்பெனி மாறிய 2.5 கோடி வாடிக்கையாளர்

புதுடெல்லி : கடந்த நவம்பர் வரையில் நாடு முழுவதும் 2.58 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள், வேறு கம்பெனிகளுக்கு மாறி உள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) புள்ளிவிவரம் கூறுகிறது. செல்போன் நிறுவனங்களின் சேவை திருப்தி அளிக்காவிட்டால், வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளும் வசதி கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது.



கடந்த நவம்பர் மாத இறுதி வரை 2.58 கோடி வாடிக்கையாளர்கள் வேறு நிறுவன சேவைக்கு மாறி உள்ளதாக டிராய் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேறு நிறுவனத்துக்கு மாறியதில் குஜராத் வாடிக்கையாளர்கள் முதலிடத்தில் உள்ளனர். அங்கு 24 லட்சம் பேர் மாறி உள்ளனர். கர்நாடகா (22.9 லட்சம்), ஆந்திர பிரதேசம் (22.7 லட்சம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.


தங்கள் செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனத்துக்கு மாற விரும்புவோர் Ôபோர்ட்Õ என்ற ஆங்கில சொல்லை 1900 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பின்னர், இப்போதைய நிறுவனத்திடமிருந்து ஒரு எண் எஸ்எம்எஸ் மூலம் வரும். அந்த எண்ணை புதிதாக மாற விரும்பும் நிறுவனத்தில் தெரிவித்தால் போதும். புதிய நிறுவனத்தின் வாடிக்கையாளராகி விடலாம். இதற்காக ஸி19 கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment