மிஸ்டுகால் கொடுத்து கணக்கில் உள்ள தொகையை அறிந்துகொள்ளும் வசதி உள்ளிட்ட 7 புதிய வசதிகளை, இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் வங்கியின் முதல் அரையாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட அவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எம்.பாஸின் இதனை தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடன் பேசிய டி.எம்.பாஸின், "இந்தியன் வங்கி, 2013-2014 நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டில் ரூ.306 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. மொத்த வைப்புத் தொகை 16% அதிகரித்து ரூ. 1,52,687 கோடியாக உள்ளது. கடனளிப்பு 15% அதிகரித்து ரூ. 1,11,071 கோடியாக உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு 7 புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை 09289592895 என்ற எண்ணுக்கு வங்கியில் பதிவு செய்துள்ள தங்கள் செல்போனிலிருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, கடன்கள், குறித்த விவரங்கள், பணப்பரிமாற்றம் செய்வதற்கு தங்களது மின்-அறிவுறுத்தல்களை இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதனை இணையதளம் மூலமாக மாற்றவோ அல்லது நீக்கவோ முடியும்.
வைப்புத்தொகை மீது வாடிக்கையாளர்கள் பெறும் கடன்கள் தொடர்பான விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறுவது உள்ளிட்ட புதிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன." என்று கூறினார்.
No comments:
Post a Comment