மலையாளத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற 'உஸ்தாத் ஓட்டல்' படத்தை தமிழியில் ரீமேக் செய்கிறார்கள். இதில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்கிறார்.
'தலப்பாக்கட்டி' என்று தலைப்பு
வைக்கப்பட்டுள்ள இப்படத்தை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யாசிவா இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நஸ்ரியா நசிம் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இப்படத்தை உஸ்தாத் ஓட்டல் மலையாளப் படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபனுடன் இணைந்து, ராதிகா சரத்குமாரின் ராடான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இவர்கள் ஏற்கனவே சென்னையில் ஒரு நாள் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment