Monday, November 11, 2013

'3-டி' தொழில் நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் 'ஷோலே'

இந்திய சினிமாவின் முதல் 10 சிறந்த திரைப்படங்களின் வரிசையில் என்றென்றும் நீங்காத இடத்தை பெற்றுள்ள இந்தி திரைப்படம் 'ஷோலே'.



தர்மேந்திரா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி, ஜெயா பச்சன் மற்றும் அறிமுக வில்லன் அம்ஜத் கான் ஆகியோரை புகழ் ஏணியின் உச்சியில் அமர வைத்து அழகு பார்த்த ஷோலே திரைப்படம் 1975ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடியது.

'ஏ..தோஸ்தி', 'மெஹ்பூபா.. மெஹ்பூபா' போன்ற காலத்தால் அழிக்க முடியாத இனிய பாடல்கள் கொண்ட இந்த திரைப்படம் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முப்பரிமாண 3-டி தொழில் நுட்பத்தில் 25 கோடி ரூபாய் செலவில் மெருகூட்டப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் இத்திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடனும், நவீன 3-டி மற்றும் டி.ட்டி.எஸ். தொழில் நுட்பத்துடனும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

விரைவில் மும்பையில் நடைபெறவுள்ள இந்த புதிய பதிப்பின் அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர் - நடிகைகள் பங்கேற்கிறார்கள்.

No comments:

Post a Comment