Saturday, July 20, 2013

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘நினைத்தாலே இனிக்கும்’





மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பழைய படங்களை டிஜிட்டல் முறையில் மெருகேற்றி மீண்டும் வெளியிடுவது தற்போது தமிழ் சினிமாவில் பெருகி வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’, ‘வசந்த மாளிகை’ உள்ளிட்ட காலத்தால் அழியாத படங்கள் டிஜிட்டல் முறையில் உருவாக்கி, மீண்டும் வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றன.
அந்த வரிசையில் ரஜினி, கமல் இணைந்து நடித்து
1979-ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ படமும் டிஜிட்டல் முறையில்

உருவாக்கப்படுகிறது. இப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். ஜெயப்பிரதா, கீதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற ‘நம்ம ஊரு சிங்காரி’, ‘சம்போ சிவ சம்போ’, ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம்’ பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment