தனுஷ்- சோனம் கபூரின் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்சனா படம் 100 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.
கொலவெறி பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற தனுஷ்,
இந்தியில் நடித்த முதல் படம் ராஞ்சனா. ஆனந்த் எல் ராய் இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ‘ராஞ்சனா’ திரைப்படம் ஜுன் 21ம் தேதியன்று இந்தியிலும், தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் ஜு 28ம் தேதியன்றும் வெளியானது.
காதல்-அரசியல் என கமர்சியல் அம்சங்களுடன் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. படம் வெளியான முதல் வாரத்திலேயே 30 கோடிக்கும் மேலாக வசூலித்து படம் சூப்பர் ஹிட் என பாலிவுட் வட்டாரத்தில் அறிவிக்கப்பட்டது. வெளியான முதல் நாளன்றே 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில் ராஞ்சனா படம் வெளியான மூன்று வாரங்களில் 100 கோடியை வசூலித்து விட்டதாக இந்தப் படத்தைத் தயாரித்த ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ் நடிகர்கள் யாரும் பாலிவுட்டில் இதுவரை ஜொலித்ததில்லை. இந்தக் குறையை தீர்த்து வைத்திருக்கிறார் தனுஷ் என்று சொல்லலாம்.
No comments:
Post a Comment