Saturday, April 06, 2013

18 காமெடி நடிகர்கள் ஒன்றாக இணையும் 'கோப்பெருந்தேவி'


புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'கோப்பெருந்தேவி'.

சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு
எஸ்.எம்.பிரசாந்த் இசையமைக்கிறார். இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமி நாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உள்ளிட்ட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.

அடர்ந்த காட்டுக்குள் பிரம்மாணடமான புதையல் இருக்கிறது. அந்த புதையலை பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது. இந்த விஷயம் தெரியாமல் புதையலை எடுக்க ஒரு நகைச்சுவைப் பட்டாளம் கிளம்புகிறது. அவர்கள் பேயிடம் மாட்டி என்னவெல்லாம் பாடுபட்டார்கள் என்பது தான் 'கோப்பெருந்தேவி' படத்தின் கதை.

முதலில் இந்தப் படத்தில் நாயகி வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்கும் முயற்சி நடந்துள்ளது. ஆனால் அவர் கால்ஷீட் இல்லாததை காரணம் காட்டி நடிக்கவில்லை. இதை யாரோ தவறுதலாக புரிந்து கொண்டு படத்தில் திரிஷா நடிப்பதாக கூறிவிட்டனர். இந்நிலையில் திரிஷா இடத்தில் தற்போது முன்னணி நாயகி ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத், ராஜமுந்தரி,பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, விழுப்புரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை விருந்தாக 'கோப்பெருந்தேவி' மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.

No comments:

Post a Comment