Saturday, May 05, 2012

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் விநியோகம்:





பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் 22-ந்தேதி வெளியாகிறது.
 
பிளஸ் 2 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் உயர் கல்வி பயிலும் பொருட்டு, கல்லூரிகளில் சேர்வதற்கான முயற்சியில் இப்போதிருந்தே ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் பொறியியல் படிப்பை படிக்க விரும்புகின்றனர்.
 
பொறியியல் படிப்புக்கான கல்லூரிகளையும் தங்களுக்கு விருப்பமான பிரிவினையும் தேர்வு செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தும். இந்த கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரும் 11-ந் தேதி முதல் விநியோகிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும், 58 மையங்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250-ம் இதர மாணவர்கள் ரூ.500-ம் செலுத்தி பெறலாம்.
 
எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாணவர்கள் சலுகை விலையிலான விண்ணப்பம் பெற ஜாதி சான்றிதழின் நகலை எடுத்துச் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 31-ந்தேதி மாலை 5:30 மணிக்குள் பல்கலைக்கழகத்துக்கு சென்று சேர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment