Tuesday, April 03, 2012

3-டியில் ரிலீஸாகிறது சிவாஜியின் வீரபாண்டிய கட்ட‌பொம்மன்...!

Add caption
















கடந்த ஓராண்டாகவே கோலிவுட்டில் வெளியான எந்த படங்களும் சரியாக வசூலாகவில்லை. ஏதோ ஒருவித எதிர்பார்ப்போடு, கோடி கோடியாய் பணம்‌ போட்டு புதுப்படங்களை எடுத்து, அதை ரிலீஸ் செய்து கடைசியில், அதனால் கையை சூட்டுக் கொண்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஏராளம். இதனால் ஓல்டு இஸ் கோல்டு என்ற பாலிஸியை பின்பற்ற தொடங்கியுள்ளனர். பழைய படங்களையே புதுப்பொலிவுடன் மாற்றி ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். சமீபத்தில் சிவாஜி கணேசனின், கர்ணன் படம் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் புதிய படங்களின் வசூலை காட்டிலும் அதிகம். அந்தக்கால கட்டத்தில் 100நாட்கள் ஓடிய வசூல் சாத‌னையை இப்படம் ஓரிரு நாளில் எட்டிவிட்டது. பழைய படங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பை பார்த்த பலர், மீண்டும் பழைய படங்களை புதுப்பொலிவுடன் மாற்ற தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் 1959-ம் ஆண்டில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றி பெற்ற சரித்திர படமான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அதுவும் இம்முறை இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜி நடித்திருந்தார். அவருடன் ஜெமினி கணேசன், பத்மினி, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி.ஆர்.பந்தலு இப்படத்தை இயக்கி இருந்தார். படத்தில் இடம்பெற்ற சிவாஜியின் வீரவசனம் ரொம்ப பாப்புலர். இதற்கான வேலைகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது
. 

No comments:

Post a Comment