Thursday, April 12, 2012

ஆசியாவிலேயே எபிக் கேமரா பயன்படுத்திய முதல் திரைப்படம் 'பில்லா 2'













அஜித் நடித்து வரும் 'பில்லா 2' படத்தில் எபிக் என்ற புதுவகை கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் ஆசியாவிலேயே இந்த கேமராவை பயன்படுத்திய முதல் திரைப்படம் என்ற பெருமையை 'பில்லா 2' படம் பெற்றிருக்கிறது.
அஜித்தின் 'பில்லா' படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து 'பில்லா 2'-வை மிக பிரமாண்டமாக எடுத்து வருகிறார்கள். இதில் சாதாரண மனிதனான ஒருவர் எப்படி பில்லாவானான் என்பதை சொல்லியிருக்கிறார்கள். 'பில்லா 2' முழுக்க முழுக்க அஜித்தை மையமாக வைத்து பின்னப்பட்டிருப்பதால் அஜித்தின் தோற்றமும் நடிப்பும் பேசும்படி இருக்கும். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை இயக்கியிருக்கிறார். அமெரிக்காவில் திரைப்பட தொழில்நுட்பம் படித்துப் பட்டம் பெற்றவர். ஹீரோயின்களாக பார்வதி ஒமணக்குட்டனும், பிரேசில் நாட்டு மாடலான ப்ரூனா அப்துல்லாவும் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஆசியாவிலேயே இதுவரை எந்த திரைப்படத்திற்கும் பயன்படுத்தாத எபிக் (Epic) கேமராவை பயன்படுத்தி முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். அதீநவீன தொழில்நுட்பத்தின் அடையாளமாக திகழும் எபிக் கேமராவின் மூலம் முழுக்க முழுக்க டிஜிட்டல் படமாக உருவாகியிருக்கிறது 'பில்லா 2'.

No comments:

Post a Comment