Thursday, March 22, 2012

எளிய முறையில் பள பளக்கும் பட்டுக் கூந்தல்

ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தல் வேண்டும் என்பது பெண்களின் கனவு. கூந்தலின் பளபளப்பிற்காக ரசாயனங்கள் கலந்த செயற்கை கண்டிசனர்களை தலைக்கு உபயோகிப்பது கூந்தலோடு, சருமத்தையும் பாதிக்கும். எனவே வீட்டில் கிடைக்கக் கூடிய பொருட்களே சிறந்த கண்டிசனராக செயல்பட்டு கூந்தலை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. எனவே அழகியல் நிபுணர்கள் கூறிய ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.


முட்டை வெள்ளைக் கரு

முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும். அதனை தலையில் நன்றாக தடவி அரைமணிநேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசவும். இதனால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். முட்டையின் வாசனை பிடிக்காதவர்கள் ஷாம்பு போட்டு குளிக்கலாம் பளபளப்பு மாறாது.

தயிர் மசாஜ்

கெட்டித் தயிரை ஒரு கிண்ணத்தில் எடுத்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். மென்மையான ஷாம்பு

போட்டு குளிர்ந்த நீரில் தலையை அலசவும். கூந்தல் பளபளப்பாகும். தலையில் பொடுகு இருந்தால் அதை நீக்க சிறிதளவு எலுமிச்சை சாறு அப்ளை செய்து தலைக்கு குளிக்கலாம். பொடுகு நீங்குவதோடு கூந்தல் பளபளப்பாகும்.

வெள்ளை வினிகர்


வெள்ளை விநிகர் சிறந்த கண்டிசனராக செயல்படுகிறது. பளபளப்பான கூந்தலை பெற அரை பக்கெட் தண்ணீரில் சில துணிகள் வெள்ளை விநிகரை விட்டு கூந்தலை மூழ்க வைத்து நன்கு அலசவும். கூந்தல் பளபளப்பாகும்.

பீர் குளியல்


கூந்தலை பளபளப்பாக்குவதில் பீர் முக்கிய வகிக்கிறது. வாரம் ஒருமுறை பீர் கொண்டு கூந்தலை அலசினால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாக மாறும். இயற்கையான முறையில் கூந்தலை பளபளப்பாக்கி மென்மையாகவும் மாற்றுவதோடு சிறந்த கண்டிசனராகவும் செயல்படுகிறது. 

No comments:

Post a Comment