சென்னை : எல்ஐசி ‘ஜீவன் விருத்தி’ என்ற புதிய பாலிசி திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பற்றி எல்ஐசி தென்மண்டல மேலாளர் டி.டி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜீவன் விருத்தி என்ற புதிய பாரம்பரிய முறையிலான காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது பங்கு சந்தையுடன் இணையாத ஒரு ஒற்றை பிரீமிய காப்பீட்டுத் திட்ட தொகையாக கணக்கிடப்படுகிறது. மேலும் முதிர்வின் போது உத்திரவாத தொகையும் திரும்ப கிடைக்கும்.
அதிக பட்சமாக 120 நாட்களில் கிடைத்து விடும். மேலும் இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு வருடத்திற்கு பிறகு பாலிசியில் கடனும் பெற்றுக்கொள்ளலாம். இந்த 8 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியில் பணத்தை செலுத்தலாம். குறைந்த பட்ச காப்பீட்டுத் தொகை ரூ.1.5 லட்சம்.
அதிக பட்ச காப்பீட்டுத் தொகைக்கு வரைமுறை இல்லை. குறைந்த பட்ச பிரீமியத் தொகை ரூ.30 ஆயிரம். இது அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற ஒரு சிறந்த திட்டமாகும். இளையதலைமுறையினருக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க நினைக்கிற பெற்றோர்களுக்கும் இத்திட்டம் ஏற்ற திட்டமாகும். இதற்கு வருமான வரிச் சலுகை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment