கஞ்சா கருப்பு... பெயர்தான் கரடு முரடு காமெடியே தவிர, அவர் உள்ளத்தில் நல்ல உள்ளம்!
பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கருப்பு, தனது வருமானத்தில் ஒரு பகுதியை சத்தமின்றி நல்ல காரியங்களுக்காக செலவிட்டு வருகிறார்.
அவரும் அவரது மனைவி சங்கீதாவும் இணைந்து சில மன நலம் குன்றிய குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களின் படிப்பு செலவை ஏற்க முடிவு செய்தனர்.
அதன்படி இன்று திருச்சி அருகே உள்ள மனநலம் குன்றியோர் பள்ளிக்கு சென்று அங்கு பயின்று வரும் மாணவர்கள் பத்து பேரின் பராமரிப்பு செலவினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறினர்.
அதன்படி மாதம் தோறும் ஒரு மாணவருக்கு ரூ.3000 வீதம் பத்து மாணவர்களுக்கு ரூ.30,000 வழங்க முடிவு செய்துள்ளனர். இதேபோல் மற்றவர்களும் இதுமாதிரியான தெய்வக் குழந்தைகளை தத்து எடுத்தால் நல்லது என இருவரும் தெரிவித்து நெகிழ வைத்தனர்.
No comments:
Post a Comment