Friday, February 03, 2012

'நண்பன்'ல விஜய் அருமையாக நடிச்சிருக்கார்! - ஏ.ஆர்.முருகதாஸ்

AR Murugadoss watches Vijay?s Nanban 'நண்பன்'படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வந்தது.
'நண்பன்' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் இருந்ததால் 'துப்பாக்கி' படப்பிடிப்பு சற்று தள்ளிவைக்கப்பட்டது. 'நண்பன்' வெளியான சமயத்தில் பெப்சி - தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்சினையால், 'துப்பாக்கி' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 'நண்பன்' படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்துவிட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில், "விஜய் 'நண்பன்' படத்தில் அருமையாக நடித்து இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக் முடிந்தவுடன் அவருடன் பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மௌனகுரு' படத்திற்கும் "மௌனகுரு படம் பார்த்தேன்.. அருமையான படம்.. பார்க்க வேண்டிய படம்!" என்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

No comments:

Post a Comment