Tuesday, February 07, 2012

விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.

அ.தி.மு.க.,வில் இணைந்தார் விஜயகாந்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர்!!

விஜயகாந்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான இப்ராஹிம் ராவுத்தர், அ.தி.மு.க., கட்சியில் இணைந்துள்ளார். விஜயகாந்தை வைத்து ஏராளமான படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். தயாரிப்பாளர் மட்டுமல்ல, அவரது நெருங்கிய நண்பரும் கூட. விஜயகாந்த் இன்று இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதில் இப்ராஹிம் ராவுத்தரின் பங்கும் ரொம்ப அதிகம். 


இந்நிலையில் இப்ராஹிம் ராவுத்தர் திடீரென்று அ.தி.மு.க., பக்கம் இணைந்துள்ளார். சமீபகாலமாக விஜயகாந்திற்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவர் அ.தி.மு.க., பக்கம் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தான் விஜயகாந்தும்,ஜெயலலிதாவும் கடுமையாக மோதிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment