Saturday, February 04, 2012

கேரள சிறை கைதிகளின் கைப்பக்குவத்திற்கு வெளிச்சந்தையில் அமோக வரவேற்பு






கொச்சி:கேரளாவில் மூன்று சிறைகளில், கைதிகள் தயாரித்து விற்பனைக்கு வரும் சப்பாத்தி, குருமாவுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உருவாகியுள்ளது.




கேரளாவில் சிறைக் கைதிகளை சப்பாத்தி தயாரிக்க வைத்து, அதை வெளியில் விற்பனை செய்யும் திட்டம், முதல் முதலாக திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறையில் துவக்கப்பட்டது. திட்டத்தை இரு மாதங்களுக்கு முன், தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான சேரன் துவக்கி வைத்தார். கைதிகள் சப்பாத்தி தயாரிப்பதற்காக, ஐந்து கோடி ரூபாய் செலவில் இரண்டு இயந்திரங்களும் வாங்கப்பட்டன.கைதிகள் மூலம் தயாரிக்கப்பட்டு, வெளிச்சந்தைக்கு விற்பனைக்கு வரும் சப்பாத்திக்கு, மக்களிடம் அமோக மவுசு உருவானதை அடுத்து, இத்திட்டம், திருச்சூர் மாவட்டம் விய்யூர் மற்றும் கோழிக்கோடு சிறைகளிலும் 
விரிவுபடுத்தப்பட்டது.
திருவனந்தபுரம், பூஜப்புரா மத்திய சிறையில், தினமும் 40 ஆயிரம் சப்பாத்திகளும், 3,500 பாக்கெட் சிக்கன் கறியும், 500 பாக்கெட் காய்கறி குருமாவும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன என, சிறையின் கண்காணிப்பாளர் பிரதீப் கூறினார்.கோழிக்கறியுடன் ஒரு பாக்கெட் சப்பாத்தி விலை, 25 ரூபாய். இப்பாக்கெட்டில் ஐந்து சப்பாத்திகளும், கோழிக்கறியும் இருக்கும். சைவம் என்றால், இதே அளவு சப்பாத்திகளுடன், காய்கறி குருமா உண்டு. இந்த பாக்கெட் விலை, 20 ரூபாய். சிறைகளில் தயாராகும் இச்சப்பாத்திக்கு, "பூஜப்புரா சப்பாத்தி' என பெயரிடப்பட்டுள்ளது.பூஜப்புரா மத்திய சிறையில், தினமும் காலை 9 மணிக்கு தயாராகும் சப்பாத்தி, கோழிக்கறி மற்றும் காய்கறி குருமா, திருவனந்தபுரத்தில் மூன்று இடங்களில், மாலை 6 மணி வரை விற்கப்படுகின்றன. யாரும் மொத்த ஆர்டர் கொடுத்தால், அதுவும் பெறப்பட்டு, சப்பாத்தி, குருமா சப்ளை செய்யப்படுகிறது.


சப்பாத்தி விற்பனைக்கு மவுசு கூடியுள்ளதற்கு, விலை குறைவாக இருப்பதும் ஒரு காரணம். சப்பாத்தி தயாரிப்பதில் தினமும் மூன்று ஷிப்டுகளில், 150 கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலை மண்டல பூஜை சீசனின் போது, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்களின் வசதிக்காக, தினமும் 10 ஆயிரம் சப்பாத்திகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டன.பூஜப்புரா சிறையில் தினமும் தயாரிக்கப்படும், 40 ஆயிரம் சப்பாத்திகள் தவிர, விய்யூர் மற்றும் கோழிக்கோடு சிறைகளில், தற்போதைக்கு தினமும் தலா 10 ஆயிரம் சப்பாத்தி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த இரண்டு சிறைகளிலும், தற்போதைக்கு சப்பாத்தி மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. குருமா தயாரிப்பு துவங்கவில்லை. இந்தச் சப்பாத்தி தயாரிப்பு திட் டத்தை விரைவில், எர்ணாகுளம் மற்றும் கொல்லம் சிறை களிலும் அறிமுகப் படுத்த வும் ஆலோ சிக்கப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment