Friday, February 03, 2012

வடிவேலு அம்மாவுக்கு சீரியஸ்: உடனே மதுரைக்கு பறந்தார் .


Vadivelu mother admit hospital













நடிகர் வடிவேலுவின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் வடிவேலு மதுரைக்கு விரைந்துள்ளார்.
நடிகர் வடிவேலுவின் சொந்த ஊர் மதுரை அருகே உள்ள ஐராவதநல்லூர் ஆகும். இங்குதான் அவரது சொந்த வீடு உள்ளது. தந்தை நடராஜ பிள்ளை தனது குடும்பத்துடன் இங்கு வசித்து வந்தார். இந்த வீட்டில் தற்போது வடிவேலுவின் தாயார் தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். வடிவேலு, சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று திடீரென வடிவேலுவின் தாயாருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் கிடைத்ததும் வடிவேலு நேற்றே விமானம் மூலம் மதுரைக்கு விரைந்தார். அங்கு தனது தாயாருக்கு அருகிலேயே இருந்து வருகிறார். ஆமாமா... இப்போ சும்மாதானே இருக்கீங்க.. பக்கத்துலருந்து நல்லா கவனிச்சுக்கோங்க......

No comments:

Post a Comment