'மங்காத்தா' படத்தை தொடர்ந்து சூர்யாவின் சொந்தப்பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு படம் இயக்க ஓப்புக்கொண்டார் வெங்கட் பிரபு! இந்தப்படத்தில் சூர்யா ஜோடியாக
ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என்ற என்ற வெங்கட் பிரபுவின் விருப்பத்தை சூர்யா முதலில் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது சோனம் கபூரை ஏன் கேட்டுப்பார்க்கக் கூடாது என்று சூர்யா கொடுத்த யோசனையை ஏற்று சோனம் தரப்பில் பேசப்பட்டதாம்! பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக சூர்யா என்றதும் உடனே ஒகே சொல்லியிருகிறார் சோனம் என்கிறார்கள். ஏற்கனவே 'வேட்டை மன்னன்' படத்துக்கு சிம்புவுடன் நடிக்கக் கேட்டு மறுத்தார் இந்த ஐஸ்க்ரீம் அழகி. இதே படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்கும் ரவிதேஜாவுக்கு 'ஆடுகளம்' நாயகி டாப்சியை ஜோடியாக்காவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் க்ரீன் ஸ்டூடியோ வட்டாரத்தில். தமிழ்நாடு காவல்துறையில் க்யூ பிரான்ஞ்ச் பிரிவில், பயிற்சி முடித்து சிஐடிக்களாக வேலைக்குச் சேரும் இரண்டு இளம் அதிகாரிகள், குணம், கொள்கை, எல்லாவற்றில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள். எப்போதுமே ஒத்துப்போகாத இந்த இரண்டு பேரிடமும் ஒரு முக்கியமான அசைன்மெண்டை ஒப்படைக்கிறாராம் முதலைமைச்சர். இதை அவர்கள் எப்படி முடித்தார்கள் என்பதை செம காமெடி ஆக்ஷனாக கொடுக்கப் போகிறார் வெங்கட் பிரபு என்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தில் சூர்யா முதல் முறையாக் ஒரு பாடல் பாட இருக்கிறார் என்றும் தகவல் கிடைக்கிறது.
No comments:
Post a Comment