
இந்தியாவின் முன்னணி இணையத்தள சேவை நிறுவனம் விசுவல்மீடியா டெக்னாலஜிஸ். கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மென்பொருள் உருவாக்கம்(Software Development), இணையத் தள வடிவமைப்பு (Website Design) உள்ளிட்ட பல்வேறு தரமான சேவைகளை, கட்டுபடியாகும் விலையில் வழங்கி வருகிறது எம் நிறுவனம்.
வளரும் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் C Pad எனும் கணிப்பலகை(Tablet Pc)வடிவமைக்கப்பட்டுள்ளது. . பெரிய பெரிய கணினிகளில் செய்யும் பணிகளை மிக எளிமையாகச் செய்யும் அளவிற்கு C Pad கணிப்பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது.
7 இன்ச் அகலமும் 1/2 கிலோ எடையும் கொண்ட இக் கணினியை நாம் கையிலேயே எங்கும் எடுத்துச் செல்லலாம். எல்லா இடங்களிலும் இன்டர்நெட்டைக் (Internet) கனெக்ட் செய்யலாம். WiFi, 3G, Lan Cable ஆகியவற்றின் வழியாகவும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். வீடியோ, ஆடியோ ரெக்கார்டர் என எல்லா வசதிகளும் இந்த C Pad கணிப்பலகையில் உண்டு. மேலும் தமிழில் மின்னஞ்சல் செய்திடவும் , பெற்றிடவும் முடியும். மேலும் மாற்றுத்திறனாளிகள் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
கூகிள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த ஆன்டிராய்டு இயங்குதளத்தில் உலகம் முழுதும் பல லட்சக்கணக்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வருடத்தின் இறுதியில் இம்மென்பொருட்கள் கோடிகளை அடையும் என்பது எதிர்பார்ப்பு
100 ரூபாய்க்கு அன்லிமிடட் இன்டர்நெட் இணைப்பு.
குழந்தைகளின் கல்வியில் தொடங்கி வியாபாரிகள், நிறுவனங்கள், மருத்துவர்கள் என எல்லா தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இந்த C Pad கணிப்பலகையை வெகு எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வளர்ந்து வரும் இந்தியத் தொழில்நுட்பச் சந்தையை ஏற்றமுறச் செய்ய இந்த C Pad கணிப்பலகை.
வாங்குங்கள்! வாழ்த்துங்கள்!!
ஒன்று சேர்ந்து சிகரம் தொடுவோம்!!!.
No comments:
Post a Comment