Thursday, January 12, 2012

இருமியபோது கேன்சர் கட்டி வெளியே வந்து பெண் உயிர் தப்பிய அதிசயம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டன் : இங்கிலாந்தில் பெண் இருமியபோது கேன்சர் கட்டி வெளியே வந்தது. இதனால் அவர் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தார். லண்டனை சேர்ந்த பெண் கிளாரி ஆஸ்பர்ன் (37). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தொண்டையில் ஏதோ சிக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது வேகமாக இருமியபோது, எச்சிலுடன் சிறிய கட்டி ஒன்றும் வெளியே வந்து விழுந்தது. இதனால் பயந்து போன கிளாரி, கட்டியுடன் மருத்துவமனைக்கு ஓடினார். டாக்டர்களிடம் விவரத்தை கூறினார். கிளாரியின் தொண்டையை டாக்டர்கள் பரிசோதித்தனர். கட்டியை சோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதில், கேன்சர் பரவி இருப்பது தெரிந்தது.

பொதுவாக தொண்டையில் வரும் கேன்சர் கட்டிகளை சிக்கலான அறுவை சிகிச்சை மூலமாகத்தான் வெட்டி எடுக்க முடியும். அதிலும் 100 சதவீத வெற்றிக் கிடைக்கும் என்பதை கூற முடியாது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கீமோதெரபியும் தேவைப்படும். இது எதுவும் இல்லாமல், கிளாரிக்கு தாமாக கட்டி வெளியே வந்ததால் அவர் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் இதுபோன்று 30 சம்பவங்கள் தான் நிகழ்ந்துள்ளன என்று டாக்டர்கள் கூறினர். அபூர்வமாக உயிர் தப்பிய கிளாரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment