புதுடில்லி: ஹீரோ ஹோண்டா கூட்டு குழுமத்திலிருந்து பிரிந்துவிட்ட ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு மாடல்களை களமிறக்குவதில் அந்த நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற சந்தைக்கு ஏற்றவாறு புதிய பட்ஜெட் பைக்கை டில்லி ஆட்டோ கண்காட்சியில் ஹோண்டா பார்வைக்கு வைத்துள்ளது
ட்ரீம் யுகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பட்ஜெட் பைக்கில் 9 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பைக் லிட்டருக்கு 72 கிமீ மைலேஜ் தரும் என்றும் ஹோண்டா தெரிவிக்கிறது. அருமையான வடிவமைப்பில், கண்கவரும் கிராபிக்ஸ் ஸ்டிக்கர்களுடன் பார்த்தவுடனே ஒரு புதிய பட்ஜெட் நம் மார்க்கெட்டிற்கு கிடைத்துவிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது ஹோண்டா ட்ரீம் யுகா. இதன் வர்த்தக ரீதியிலான அறிமுகம் குறித்து தகவல்கள் எதையும் ஹோண்டா தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment