புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக,
ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்
என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன்,
மாணவன் : இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.
ஒரு கோ-எஜுகேஷன் காலேஜின் முதல் நாள். புதிய மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் விதிகளை விளக்கினார் ப்ரின்சிபால்.
"பொண்ணுங்களோட ஹாஸ்டல்ல பசங்க யாரும் போகக்கூடாது.
யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும்.
யாராவது ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும்.
மூணாவது தடவையா மாட்டினா 300 ரூபா கட்டணும்" என்றார் ப்ரின்சிபால்.
ஒரு மாணவன் கேட்டான் "சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும்?"
கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.
அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.
அழகிக்கு கோபம் வந்துவிட்டது.
அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.
அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.
No comments:
Post a Comment