மத்திய தரைக்கடலில் `ஸ்கேட்ஸ்’ என்ற ஒருவகை மீன் உள்ளது. இதை `டார்பிடோரேஸ்’ என்றும் அழைக்கிறார்கள்.
இந்த மீன்கள் பொதுவாக அமைதியாகவும், மெதுவாகவும் நீந்தும்.
ஆனால் இதன் அருகே வேறு சில மீன்களோ, நண்டுகளோ, கடல்வாழ் உயிரினங்களோ வந்துவிட்டால் அவற்றை மின்சாரத்தால் தாக்கும்.
அதில் துடிதுடித்து மடியும் அந்த உயிரினங்களை ஸ்கேட்ஸ் உணவாக்கிக்கொள்ளும்.
ஸ்கேட்ஸ் மீன்களைப் போலவே மின்னாற்றலை வெளிப்படுத்தும் இன்னொரு வகை மீன், `ஈல்’ ஆகும். ஆனால் இவை கடலில் அல்லாமல், நன்னீரில் வாழ்பவை.
இந்த மீன்கள் இரவில் மட்டுமே தண்ணீரில் இரை தேடும்.
தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியின் ஆழமற்ற பகுதிகளில் இம்மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
இவை வெளிப்படுத்தும் மின் சக்தி, பெரிய பிராணிகளைக் கூட செயலிழக்கச் செய்யும் அளவு சக்தி வாய்ந்தது. இதனால் அப்பகுதியில் வாழும் பூர்வகுடி மக்கள் அமேசான் நதியில் இறங்கி நடக்கவே அஞ்சுகிறார்கள்.
No comments:
Post a Comment