Friday, January 20, 2012

‘பங்கு சந்தைகள் 14 சதவீதம் உயரும்’



புதுடெல்லி : இந்த ஆண்டில் இந்திய பங்கு சந்தைகள் 14 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக சர்வதேச நிதி ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குறித்த எதிர்மறை தகவல்கள் நின்று விட்டன. கடந்த காலாண்டில் கம்பெனிகளின் நிதி நிலை அறிக்கைகள் சாதகமான நிலைக்கு திரும்பியுள்ளன.


வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் நிலையற்றதன்மை நீடிப்பதால் இந்திய பங்கு சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரிக்க வாய்ப்பு ஆகியவை இந்திய சந்தைகள் உயர்வை உறுதி செய்யும். சென்செக்ஸ் இந்த ஆண்டில் 18,741 புள்ளி வரை உயரக்கூடும். பணவீக்கமும் தொடர்ந்து சரிந்து வருவதால் இனி இந்திய முதலீடுகள் கவர்ச்சிகரமாக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment