
புதுடெல்லி : வோடபோன் வரி செலுத்துமாறு மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. லண்டனைச் சேர்ந்த போன் நிறுவனம் வோடபோன். இந்தியாவில் ஏற்கனவே செயல்பட்ட ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவன வர்த்தகத்தை 2007ம் ஆண்டில் ரூ.55,000 கோடிக்கு வோடபோன் வாங்கியது. அதற்கான ஒப்பந்தம் கரீபியன் கடலில் இங்கிலாந்துக்கு சொந்தமான தீவான கேமெனில் கையெழுத்தானது.
ஹட்சிசன் நிறுவன வர்த்தகத்தில் இந்திய முதலீடு செய்த வகையில் ரூ.11,000 கோடி வரி செலுத்துமாறு வோடபோனுக்கு மும்பை வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. வெளிநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு இந்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை என்று வோடபோன் பதிலளித்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்தது. அங்கு வோடபோனுக்கு எதிராக தீர்ப்பு வந்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதி ஸ்தேந்திர குமார், ராதாகிருஷ்ணன் கொண்ட பென்ச் விசாரித்தது. அதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ‘‘வோடபோன் வாங்கிய ஹட்சிசன் ஒரே இரவில் இந்தியாவில் நுழையவில்லை.
1994 முதல் சேவை அளித்து நேரடி மற்றும் மறைமுக வரியாக அரசுக்கு அந்நிறுவனம் ரூ.20,242 கோடி செலுத்தியுள்ளது’’ என்று தலைமை நீதிபதி கபாடியா தீர்ப்பில் கூறினார். எனவே, மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணையின்போது நீதிமன்ற உத்தரவுப்படி அரசிடம் வோடபோன் செய்த ரூ.2,500 கோடி டெபாசிட்டை வட்டியுடன் 2 மாதத்தில் அரசு திருப்பி தர வேண்டும் என்று நீதிபதிகள் கபாடியா, ஸ்தேந்திர குமார் தீர்ப்பளித்தனர்.
£ இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை வென்றுள்ளது என்று தீர்ப்பு பற்றி வோடபோன் நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
£ இந்த தீர்ப்பால் இதேபோன்ற சிக்கலை சந்திக்கும் மேலும் 8 நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன.
No comments:
Post a Comment