Saturday, May 12, 2012

ரூ.3,999ல் புதிய கோபியன் டேப்லெட். மே 23 முதல்






கணினி சம்பந்தப்பட்ட சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகள் ஆகியவற்றைத் தயாரித்து வரும் கோபியன் நிறுவனம் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இந்த டேப்லெட்டிற்கு ஐஎக்ஸ்எ டேப் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் மாணவர்கள் மற்றும்
சாதாரண பொதுமக்கள் ஆகியோரைக் குறிவைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அதற்காக இந்த டேப்லெட் மிகவும் குறைந்த விலையில் வருகிறது. அதாவது இந்த டேப்லெட் ரூ.3999க்கு விற்கப்பட இருக்கிறது. குறிப்பாக டேட்டா விண்டின் உபிஸ்லேட் 7சி டேப்லெட்டுக்கு இந்த புதிய டேப்லெட் கடும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த டேப்லெட்டை வாங்க வரும் மே 23 முதல் விண்ணப்பிக்கலாம்.
விலை குறைவாக இருந்தாலும் இந்த டேப்லெட் இமெயில், வீடியோ, மியூசிக், கேம்ஸ் மற்றும் இ-புக்குகள் போன்றவற்றை தனது வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குகிறது.
இந்த டேப்லெட் மிக மெல்லியதாக இருக்கிறது. இதன் எடை 341 கிரம் மட்டுமே. மேலும் இது ஆண்ட்ராய்டு 2.3 இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர், 512 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்கும் வசதி போன்ற எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிறது.
அதோடு இந்த டேப்லெட்டில் வைபை வசதி உள்ளது. இதன் 0.3 எம்பி கேமராவில் அழகாக வீடியோ உரையாடலை நடத்தலாம். அதுபோல் இந்த டேப்லெட் எல்லாவித ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை சப்போர்ட் செய்வதால் இது சிறந்த பொழுதுபோக்கை தனது ரசிகர்களுக்கு வழங்கும்.
குறைந்த விலையில் நிறைய வசதிகளுடன் வரும் இந்த கோபியன் டேப்லெட் தனது இலக்கான மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தைப் பெறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment