மொதல்ல பணமோசடி புகார்; அடுத்து அரவணைப்பு! - குழப்பிய ராதிகா
தனது சொந்த பேனரில் விஷால் நடித்த படம் 'வெடி'. பெரிய அளவில் விஷால் எதிர்பார்த்திருந்த இந்த படம் படுதோல்வி அடைந்து அவருக்கு பெருத்த ஏமாற்றத்தைக்கொடுத்து விட்டது. அதேசமயம் அப்படத்தை ரிலீஸ் செய்த ராதிகா வேறு தனக்கு தரவேண்டிய 9 கோடியை விஷால் தரப்பு தர மறுக்கிறது என்று நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். ஆனால் அப்படி தான் புகார் கொடுத்த அடுத்த நாளே விஷால் ஆடிய நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற மைதானத்துக்கு சென்றிருக்கிறார் ராதிகா. இருவருமே நடந்த விஷயத்தை அப்படியே மறந்து பழகியிருக்கிறார்கள். அதோடு விஷாலின் அதிரடி ஆட்டத்தைப்பார்த்து அசந்து போன ராதிகா, ஆடுகளத்திற்குள்ளேயே புகுந்து அவரை கட்டிப்பிடித்துக்கொண்டாராம். முந்தின நாள் பணமோசடி செய்து விட்டதாக விஷால் மீது புகார் செய்த ராதிகா, அடுத்தநாளே அவரை கட்டித்தழுவிக்கொண்ட இந்த நிகழ்வு கோடம்பாக்கத்தை குழப்பி விட்டிருக்கிறது.
No comments:
Post a Comment