பேட்டரியில் சார்ஜ் இல்லையா? கவலையின்றி பேசுங்கள்!
செல்போனில் பேட்டரி சார்ஜ் செய்ய மறந்துபோய் வெளியிடங்களுக்குச் செல்வது அனைவருக்கும் வாடிக்கை. அது போன்ற நேரங்களில் பேட்டரி தீர்ந்து போய் போன் அணைக்கப்படும் நேரத்தில் முக்கியமான அழைப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?
உங்களிடம் நோக்கியா போன் இருந்தால்
கவலைப்படாமல், ரிசர்வ் பேட்டரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நோக்கியா மாடல் போன்களில் மறைந்திருக்கும் பேட்டரி ஆற்றல் உள்ளது. அவசர நேரங்களில் இந்த பேட்டரி சக்தியை இயக்கிப் பேசலாம். இதை இயக்க, *3370 # என்ற எண்ணை டயல் செய்யவும். சில நொடிகளில் உங்கள் பேட்டரிக்கான திறன்50 சதவீத அளவுக்கு அதிகரித்திருப்பதை திரையில் காணலாம். அடுத்த முறை பேட்டரி சார்ஜ் செய்யும் போது, மறைந்திருக்கும் பேட்டரி சக்தியும் தானாகவே சார்ஜ் ஏற்றிக்கொள்ளும்.
ரகசிய குறியீடுகளை அறிந்துகொள்ளுங்கள்!
பற்றிய பல ரகசிய தகவல்கள் மட்டுமின்றி, சிம் கார்டு லாக் ஆகி விட்டால் அதை விடுவிக்கும் ரகசிய குறியீடுகளும் உள்ளன. அவை இங்கே...
*#0000# -உங்கள் ஃபோனின் மென்பொருள் பற்றிய தகவல்களை காண்பிக்கும். அந்த தகவலில், முதல் வரி: மென்பொருள் பதிப்பு. இரண்டாவது வரி: மென்பொருள் வெளியிட்ட தேதி.
*#06# -சர்வதேச மொபைல் சாதன அடையாளம் (IMEI எண்) காணலாம்.
*#2640# -பயன்பாட்டில் உள்ள பாதுகாப்பு குறியீட்டைக் காண்பிக்கும்.
*#67705646# -ஆபரேடர் லோகோவை நீக்கலாம்.
*#73# -ஃபோன் நேரம் மற்றும் கேம் ஸ்கோரை மாற்றியமைக்கலாம்.
*#7760# -தயாரிப்பாளர் குறியீட்டைக் காணலாம்.
*#92702689# -இது மிகவும் முக்கியமான குறியீடு. இதை அழுத்தினால், பின் வருபவற்றைக் காணலாம்:
-சீரியல் எண், தயாரிப்பு தேதி, ஃபோன் வாங்கிய தேதி, கடைசியாக ரிப்பேர் செய்த தேதி (0000 என்றிருந்தால், ரிப்பேர் ஏதுமில்லை என்று பொருள்)
*#4960# -சிம் கார்டு லாக் அகற்றலாம்.
*#06# ஐMஉஐ -குறியீடு
*#9998*4357# -உதவி மெனு காணலாம்.
*#9998*746# அல்லது *#9998*0746# அல்லது *#0746# -உங்கள் சிம் கார்டு பற்றிய தகவல்களைக் காணலாம்.
செல்போனுக்கான நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்தில், அல்லது அவுட் கோயிங் வசதி இல்லாதபோது எங்கேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டால், பதட்டப்படாமல் போனில் 112 என்ற எண்ணை அழுத்தவும். உலகம் முழுவதும் செயல்படக் கூடிய இந்த எண்ணை அழைத்தால், அருகாமையில் உள்ள வேறு நெட்வொர்க்குடன் இணைப்பு ஏற்படுத்தி, 100, 101 போன்ற அவசர எண்களை அழைப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரும். உங்கள் போனின் விசைப்பலகையை இயக்க முடியாத நிலையிலும், இந்த எண்ணை மட்டும் எளிதாக டயல் செய்யலாம்.
No comments:
Post a Comment