அதிக சேமிப்பு மற்றும் முதலீடு விகிதங்கள் உதவியுடன் 2012 ,13ம் நிதி ஆண்டில் இந்தியா 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான ஆசிய பசிபிக் பொருளாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரம் உறுதியான உள்நாட்டு அடிப்படையை கொண்டது. எனவேதான், சர்வதேச பொருளாதார நெருக்கடி நேரத்திலும் இந்தியா பாதிக்கப்படவில்லை.
அதிக சேமிப்பு மற்றும் முதலீடு விகிதங்கள், அதிவிரைவாக அதிகரித்து வரும் மனித வளம் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகிய காரணங்கள் இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட காரணமாகின்றன. எனவே, 2012 ,13ம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்துக்கு குறையாது என நம்பலாம்.கடந்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதம். அதைவிட அதிகரிக்கும் வகையில் இந்த நிதி ஆண்டில் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.
இந்நிலையில், பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சி பெறும் என ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment