Friday, January 06, 2012

அஜித் வில்லன் யார்?

அஜித்தின் பில்லா 2 முடிந்த பிறகு அவரை வைத்து இயக்குனர் விஷ்ணுவர்த்தன் படம் எடுக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இத்திரைப்படத்தில்
 தனது நடிகர் சகோதரரான கிருஷ்ணாவை முக்கிய ரோலில் நடிக்க வைக்க விஷ்ணுவர்த்தன் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அநேகமாக கிருஷ்ணா இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. இப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவு செய்யப்படவில்லை. ஹீரோயின் ரேசில் அமலா பாலும், அனுஷ்காவும் இருக்கின்றனர். இவர்களில் யார் என்பது விரைவில் தெரியும். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர் மொத்த காஸ்டிங் குறித்த தகவலையும் தெரிவிப்பாராம் விஷ்ணுவர்த்தன்.

No comments:

Post a Comment