Friday, January 06, 2012

கொள்ளைக்காரன் பொங்கலுக்கு ரிலிஸ்



மைனா விதார்த் நடித்து வெளி வர உள்ள படம் கொள்ளைக்காரன், படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே வேட்டை, நண்பன் என்று இரண்டு படங்கள் மட்டுமே பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் நிலையில் இப்போது புதிய வரவாக கொள்ளைக்காரனும்
 சேர்ந்துள்ளது. பிரசாத் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் கொள்ளைக்காரன் ‌படத்தில் தமிழ்செல்வன் இயக்கி உள்ளார். இவர் சீனு ராமசாமியிடம் அசோஷியேட் டைரக்டராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.எல்.ஜோகன் இசையில் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுசிறு தவறுகள் செய்து, பின்னர் திருந்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞனை பற்றிய கூறுவதே கொள்ளைக்காரனின் கதையாகும். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் கும்கோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்த காதலுடன் கொள்ளைக்காரன் படம் கூறுவதாக டைரக்டர் தமிழ்ச்செல்வன் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment