நகைகள் வாங்கும் போதும், வாங்கிய பின்னும் பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் இதோ:
* நகை வாங்கச் செல்லும் முன், எந்த நகை வாங்கப் போகிறோம் என்பதை உறுதி செய்தபின், கடைக்குச் செல்லுங்கள்.
* உங்கள், "பட்ஜெட்’ என்ன என்பதில், தெளிவாய் இருக்க வேண்டும். "ஹால் மார்க்’ முத்திரை உள்ள நகைகளையே வாங்க வேண்டும்.
* பழைய கல் வைத்த நகையை மாற்றி, புதிதாக வாங்க வேண்டும் என்று நினைத்தால், கற்களை எடுத்த பின் எடை போட்டு, அதற்கேற்ற விலையில் புதிய நகைகளை வாங்குங்கள்.
* செய்கூலி, சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
* சரியான ரசீது கொடுக்கப்பட்டுள் ளதா என்பதை, ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
* அணிவதற்காக நகை வாங்கப் போகிறீர்களா… அல்லது முதலீடு செய்யும் முயற்சியா… முதலீடு என்றால், தங்கக் காசாக வாங்குவது சிறந்தது.
* நகை வாங்க கிளம்பும் முன், தங்கம், வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* தரமான கடைகளில் நகை வாங்குங்கள். தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் கடைகளில் வாங்கினால் தரம் குறையும்; பிறகு வருந்த வேண்டாம்.
* கே.டி.எம்., நகைகள், தனியாக தயாரிக்கப்படுபவை. நீங்கள் வாங்கும் நகை, எந்த வகையை சார்ந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள் ளுங்கள். மேலும், ரசீதில், அது குறித்த தகவல் எழுதப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
* நகைகளை வாங்கியவுடன், அதைப் புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள். நகைகளை, "இன்சூர்’ செய்வது மிக மிக முக்கியம். இதெல்லாம் சற்று சிரமமான வேலைகள் தான். ஆனாலும், செய்து வைத்து விட்டால், ஆபத்துக்கு உதவும்.
நகைகளை பராமரிக்கும் முறை:
நகைகள் வாங்கும் அளவிற்கு, அதை பெரும்பாலானோர் சரியாக பராமரிப்பதில்லை. நகைகளை முறையாக பராமரித்தால்தான், அவை நீண்ட நாட்களுக்கு இருக்கும். நகைகளை பாது காப்பது எப்படி… இதோ சில டிப்ஸ் உங்களுக்காக…
முத்து நகைகள்
* முத்து பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில், வெள்ளை நிற காட்டன் துணியில், முடிந்து வைப்பது நல்லது.
* முத்து பதித்த நகைகளை நீரில் அமிழ்த்தி கழுவக் கூடாது. அப்படி கழுவினால் முத்துக்கள் ஒளி இழந்துவிடும். மேலும், இந்நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடை வில் மங்கி விடும். எனவே, ஒப் பனைகள் முடிந்த பின், முத்து நகை களை அணிய வேண்டும்.
வெள்ளி நகைகள்
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், பளபளப்பாக இருக்கும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில், சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில், வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
* வெள்ளிக் கொலுசுகளின் பளபளப்பு மங்கி, கறுத்து விட்டதா? கவலை வேண்டாம். கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து, கொஞ்ச நேரம் ஊறியபின், பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
தங்க நகைகள்
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் பதிக்கப் பட்டிருக்கும் கல், முத்து விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன், கவரிங் நகை களை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகை சீக்கிரம் தேய்ந்து விடும்.
* பூந்திக் கொட்டையை ஊற வைத்த தண்ணீரில், தங்க நகைகளை கழுவினால், அழுக்கு நீங்கி, பளபளப்பாக இருக்கும்.
கற்கள் பதித்த நகைகள்
* கற்கள் பதித்த நகைகளை தினமும் அணிந்தால், ஒளி மங்கிவிடும். இதற்கு நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ் அல்லது பனியன் துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின், சுத்தமான தண்ணீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய், பிசுக்கு போன்றவை வெளியேறி விடும்.
No comments:
Post a Comment