Thursday, May 03, 2012

தாஜ்மஹாலைச் சுற்றி அமையவுள்ள மும்தாஜ் பூங்கா



சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக உலக அதிசியமான தாஜ்மஹால், மேலும் பல வசதிகளுடன் சீரமைக்கப்படவுள்ளது.



உலக அதிசியங்களுல் ஒன்றாக திகழும் தாஜ்மஹால், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது.
நாள்தோறும் தாஜ்மஹாலுக்கு அதிகமான வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கங்களை அதிகப்படுத்தவும் தாஜ்மஹாலை மேலும் அழகு படுத்தவும் உத்திரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
தாஜ்மஹாலை சுற்றி தாஜ் இயற்கைப் பூங்கா அமைக்க வேண்டுமென்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கான செயற்குழுக் கூட்டம் தலைமை செயலாளர் ஜாவேத் உஸ்மானி தலைமையில் நேற்று விவாதிக்கப்பட்டது.
திட்டங்கள் விபரம்: அதில் நில சீரமைப்பு திட்டம், யமுனை நதி நிர்வாகம், பறவைகளுக்கான இயற்கை வசிப்பிடம், தாஜ்மஹாலை சுற்றி மும்தாஜ் சுற்றுச்சூழல் பூங்கா, அந்த பூங்காவில் நடை பயிற்சி, ஒட்டக சவாரி, யமுனை நதியில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இரவு நேரங்களில் சைக்கிளில் சுற்றி வந்து தாஜ்மஹாலையும் அதன் அருகில் உள்ள அழகிய அமைப்புகளையும் கண்டுகளிக்க வசதியாக 8 கி.மீ. தூர மார்பிள் கல்லிலான சாலை அமைக்கப்பட உள்ளது.


சுற்றுலாப் பயணிகளை மேலும் கவருவதற்காகவே இதுபோன்ற வசதிகள் தாஜ்மஹால் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment