Wednesday, May 02, 2012

தூய பட்டாடையை கண்டறிய நவீன "லேபிள்' அறிமுகம்











நூறு சதவீதம் தூய்மையான பட்டாடை என நுகர்வோர் எளிதில் கண்டறியும் வகையில், துணியில் இருந்து பிரிக்க முடியாத "பியூஷன் லேபிள்' ஒட்டும் முறையை மத்தியசில்க் மார்க்நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது .இதுதொடர்பான விழிப்புணர்வு கூட்டம், மதுரையில் நடந்தது.





சென்னை மண்டல துணை இயக்குனர் பாண்டி பேசியதாவது : எங்கள் நிறுவனம் தரும் "சில்க் மார்க்' லேபிளை பட்டாடையில் "ஸ்டாப்லர்' அல்லது பசை மூலம் ஒட்டி, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் விற்கின்றனர். இந்த லேபிளை கிழித்து, போலி பட்டாடையில் ஒட்டி, சிலர் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதை தடுக்க, ஆடையில் இருந்து பிரிக்கமுடியாத வகையில் "பியூஷன் லேபிள்' ஒட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த லேபிளில் பொறிக்கப்பட்ட எண் வரிசை "ரேண்டம்' முறையில் தயாரிக்கப்படுகிறது. இதை பிரத்யேக மென்பொருளால் கண்காணிக்கிறோம். இந்த லேபிள் தொகுப்பானது இயந்திரம், லேபிளை உள்ளடக்கியது. இதை சில்க்மார்க் நிறுவனம் 50 சதவீத உதவித்தொகையில் வழங்குகிறது, என்றார். பெங்களூரூ உதவி இயக்குனர் கணபதிராமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment