தமிழ் சினிமாவில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உள்ளார். புதிதாக நடிக்க உள்ள 'சஞ்சீர்' இந்திப் படத்துக்கு ரூ.9 கோடி சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தி முன்னணி நடிகைகளான கத்ரீனா கபூப், கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்றோர் சராசரியாக ரூ.2 1/2 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். பிரியங்காவும் இதுவரை இவர்கள் வாங்கும் சம்பளத்தைதான் பெற்று வந்தார். ஐஸ்வர்யா ராய் தமிழில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரூ. 5 1/2 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. 'ஹீரோயின்' படத்தில் நடிக்க கரீனா கபூர் அதிக சம்பளம் வாங்கினார். 'டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யா பாலனுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. இவர்களையெல்லாம் பிரியங்கா சோப்ரா மிஞ்சிவிட்டார். மார்க்கெட் இருக்கிறவரைக்கும் சம்பாரிச்சா தானே உண்டு.

No comments:
Post a Comment