கடந்த ஒரு ஆண்டுகளில் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் மற்றும் பல்வேறு ஐகோர்ட் நீதிபதிகள் மீது 75-க்கும் மேற்பட்ட லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கைக்கும் மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சுபாஷ் அகர்வால் என்பவர் , தாக்கல் செய்த மனுவில் நாடுமுழுவதும் உள்ள பல்வேறு ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீதான லஞ்சம் , முறைகேடு உள்ளிட்ட புகார்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தருமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
அதன்படி மத்திய சட்டத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் , பதவியின் போது லஞ்சம் வாங்கியது மற்றும் முறைகேடாக நடந்து கொண்டது போன்ற காரணங்களால் கடந்த ஒரு ஆண்டுகளில் 9 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது 15 வழக்குகளும், பல்வேறு ஐகோர்ட் நீதிபதிகள் மீது 51 வழக்குகளும் உள்ளன.
இவர்களை தவிர தேசிய மனித உரிமை அமைப்பின் தலைவரும், முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான கே.ஜி. பாலகிருஷ்ணன் மீது ஊழல் மற்றும் நிலமேசாடி என 12 வழக்குகள் உள்ளன. இவர்களுக்கு எதிரான புகார்கள் தனிப்பட்ட முறையில் விசாரிக்க முடியாது என்பதால் பெயர்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீதான விசாரணை குறித்து நீதித்துறை பொறுப்புணர்வு சட்டம், ஏற்கனவே லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து நீதிபதிகள் மீதான விசாரணை வெளிப்படையாகும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment