Tuesday, February 07, 2012

இலியானா மீது ரூ.40லட்சம் மோசடி புகார்...!



தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை இலியானா மீது ரூ.40 லட்சம் மோசடி புகார் கொடுத்துள்ளார் தெய்வத்திருமகள் தயாரிப்பாளர் மோகன் நடராஜன். கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை இலியானா, அதன்பிறகு வாய்ப்புகள் ஏதும் அமையாததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு நம்பர்-1 நடிகையாக வலம் வந்த இலியானா, நீண்ட இடை‌வெளிக்கு பிறகு விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நண்பன் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் தனக்கு நல்ல வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தார் இலியானா. ஆனால் அவரது எண்ணம் கனவாவே இருக்கிறது. அதேசமயம் நண்பன் படத்தில் இவரது நடிப்பை பார்த்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் இலியானவை தங்களது அடுத்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் இலியானா ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தேன். இதில் விக்ரமிற்கு ஜோடியாக இலியானாவை ஒப்பந்தம் செய்து, அதற்காக அவருக்கு ரூ.40 லட்சம் அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டது. ஆனால் திடீரென இப்படம் கைவிடப்பட்டது. இதனால் இலியானாவிடம் பணத்தை திருப்பி கேட்டேன, ஆனால் அவர் பணத்தை தராமல் தொடர்ந்து இழுத்தடித்து கொண்டே இருக்கிறார். எனவே என்னுடைய பணத்தை அவரிடமிருந்து பெற்று தாருங்கள் என்று கூறியுள்ளார். 

No comments:

Post a Comment