Sunday, January 15, 2012

பயன் தரும் புதினா








கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போல   புதினாவும் உணவுக்கு   சுவையும்  மணமும்  தர   பயன்படுத்தப்படுகிறது.

புதினா பசியைத் தூண்டும்சக்திகொண்டது.பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீர
 புதினா   மிகவும்  உதவுகிறது.  ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக் களை அழிக்கவும்  வாய்வுத் தொல்லையை போக்கவும்  புதினா  உதவுகிறது    புதினாவில்   உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில்   இதில் இருக்கின்றன.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்து கின்றது.  வறட்டு இருமல்,  ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப் படுத்துகிறது.   புதினாவை  தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும்.சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புதினாவை  துவையல்  செய்து   சோற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும் இதோட தாவரவியல் பேரு, மென்தா அர்வேன்சிஸ். புதினாவுல உள்ள எல்லா பாகங்களும் மருந்தாக பயன்படுது. இது அஜீரணத்தைப் போக்குது. சிறுநீரக கோளாறை சரிசெய்யுது. இதோட கஷாயத்தோட, லெமன் கிராஸை கலந்து சாப்பிட்டால், காய்ச்சலைக் குணப்படுத்தலாம். மெந்தால்ங்கற வாசமுள்ள தைலத்தை இதிலருந்துதான் எடுக்கிறாங்க.
புதினாவோட, தலைவலி, வயிற்று வலி, அரிப்பு, தொண்டைக் கம்மல், அழற்சி, நரம்பு வலி, இடுப்பு வாத நோய், கீல்வாதம் போன்ற நோய்களுக்கு தனியாக வேர் அல்லது வேறு பொருட்களை இலவங்க தைலம், யூகலிப்டஸ் தைலம், பாரபின் ஆகியவற்றோடு கலந்து மருந்து தயாரிக்கப்படுது.

No comments:

Post a Comment