மும்பை: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) மீண்டும் ‘கோல்டன் பீக்காக்’ புதுமை விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஜீவன் ஆங்குர் என்ற குழந்தைகளுக்கான புதிய திட்டத்தை
நாளை அறிமுகம் செய்கிறது.
குழந்தைகளின் எதிர்கால உயர்கல்வி கட்டணம் மற்றும் இதர தேவைகளை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 17 வயது வரை உள்ள குழந்தைகளை கொண்ட
பெற்றோர் சேரலாம். பெற்றோரின் குறைந்தபட்ச வயது 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும். ஒற்றை பிரீமியமாகவோ, மாதாந்திர, காலாண்டு, அரை யாண்டு, வருடாந்திர அடிப் படையிலோ
செலுத்தலாம். பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தால், அவரது வாரிசுதாரருக்கு உடனடியாக பாலிசி தொகை வழங்கப்படும். அத்துடன் கூடுதலாக பாலிசி காலம் முடியும் வரை ஆண்டுதோறும்
மொத்த பாலிசி தொகையில் 10% வழங்கப்படும்.
Ôஜீவன் ஆரோக்யாÕ என்ற குடும்பத்தினரை உள்ளடக்கிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக எல்ஐசிக்கு ‘கோல்டன் பீக்காக்’ புதுமை விருது வழங்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையிலான நடுவர் குழு இந்த விருதுக்கான முடிவை அறிவித்தது. கடந்த ஜூன் 2011&ல் அறிமுகம் செய்யப்பட்ட ஜீவன்
ஆரோக்யா திட்டம், கடந்த ஆண்டில் விற்பனையான மொத்த சுகாதார காப்பீட்டு திட்டங்களைப் போல 3 மடங்கு விற்பனையாகி உள்ளது. இதற்கு முன்பு ஜீவன் சரள் திட்டத்துக்கு இதே விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment