‘அம்புலி’ பட இயக்குனர்கள் ஹரிஷங்கர், ஹரீஸ் நாராயண் கூறியதாவது: மனித உடம்பு மிருக முகத்தோடு ஒரு உருவம் வயக்காட்டு பக்கம் சுற்றுகிறது, சுடுகாட்டு வழிபக்கம் போனால் பேய் பிடித்துக்கொள்ளும், சோளகாட்டு பொம்மையில் பிசாசு புகுந்திருக்கிறது என்று கிராமப்புறங்களில் கட்டுக்கதைகள் நிறைய கூறுவார்கள். அப்படியொரு கட்டுக்கதையை மையமாக வைத்து
இப்படம் உருவாகி உள்ளது. பிளாக் அண்ட் ஒயிட் காலம் முடிந்து கலர் படங்கள் திரைக்கு வந்த 1978ம் ஆண்டு வாக்கில் நடப்பதுபோல் ஸ்கிரிப்ட் உருவாகி உள்ளது. இதனால் பிரத்யேக வண்ணத்தில் இதன் பின்னணி அமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக தமிழில் 3டி படமாக இது உருவாகி இருக்கிறது. சிறப்பு தோற்றத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். கோகுல் நாத், ஸ்ரீஜித், சனம், ஜோதிஷா, தம்பி ராமையா, கலைராணி என பலர் நடித்துள்ளனர். சில படங்கள் 2டி வடிவில் எடுக்கப்பட்டு பின்னர் 3டியாக மாற்றப்படும். இப்படத்தை நேரடியாகவே 3டியில் படமாக்கி இருக்கிறோம். இதற்காக பிரத்யேக கேமராவை வெளிநாட்டில் இருந்து விலைக்கு வாங்கி தந்தார் தயாரிப்பாளர் லோகநாதன்.
No comments:
Post a Comment